fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 பேருக்கு எதிரான மனு வாபஸ்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 12, 2019 12:39

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 பேருக்கு எதிரான மனு வாபஸ்

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 பேர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களாக பதவி வகிப்பதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ஆணைகோர் மனுவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட மனுதாரர்கள் வாபஸ்பெற்றுள்ளனர். எதிர்பார்க்கப்பட்ட நிவாரணங்கள், தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறி இந்த மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார். மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியில் தொடர்வதை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த டிசம்பர் 3 ம் திகதி இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பித்தது. இந்த தடையுத்தரவை சவாலுக்குட்படுத்தி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவையும் விலக்கிக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 12, 2019 12:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க