fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வரவு செலவு திட்டத்தின் 2ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 12, 2019 10:16

வரவு செலவு திட்டத்தின் 2ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை

வரவு செலவு திட்டத்தின் 2ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர கடந்த மாதம் வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனை தொடர்ந்து வரவு செலவு திட்டத்தின் மீதான 2ஆம் வாசிப்பு விவாதம் மார்ச் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. வரவு செலவு திட்ட மீதான 3ஆம் வாசிப்பின் குழு நிலை விவாதம் நாளை  ஆரம்பமாகவுள்ளது. இந்த விவாதம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு வரை நடைபெறவுள்ளன.

ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரவு செலவு திட்ட 3ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நாளை இடம்பெறவுள்ள குழு நிலை விவாதத்தில் ஜனாதிபதி பிரதமர் அலுவலகங்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமைச்சு அலுவலகங்கள் அரச சேவை ஆணைக்குழு உள்ளிட்ட 25 விடயங்கள் தொடர்பில் விவாதங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 12, 2019 10:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க