fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்-பா.உ. இஷாக்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2019 14:19

கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்-பா.உ. இஷாக்

நாட்டில் அபிவிருத்தி ஏற்படுவதற்காக கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென பா.உ இஷாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நொச்சியாகம அடம்பனே தெமட்டமல் புரான ரஜமஹா விஹாராயில் நிர்மாணிக்கப்பட்ட கோபுரத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறினார்;.

கல்விக்கும் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்காவிட்டால் இலங்கை ஒருபோதும் முன்னேறாது. நான் அண்மையில் இராஜாங்கனையின் உள்ள சிறுவர் பள்ளியொன்றுக்கு சென்றேன். அங்கே என்னை அவதானித்த ஒரு சிறுமி இதோ நமது மிளகாய் தூள் மாமா வருகின்றார் என்று சொன்னார். இது தான் எமது நிலை. இதுபோன்ற தவறுகளை அவர்கள் செய்கின்றனர். அவர்கள் அறிவு ரீதியில் சிந்தித்தால் இவ்வாறான நிலையில் இருந்து நாம் விடுபடலாம் எனவும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2019 14:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க