இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகள் பொருளாதார ஸ்திரமின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளன-பிரதமர்
Related Articles
நாட்டில் பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கான அடிப்படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
இளம் இலங்கை தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் 20வது ஆண்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இந்த சம்மேளனத்தின் முன்;னாள் தலைவர் தினுக்க ஹெட்டியாராச்சியினால் அப்பதவிக்கான பொறுப்புக்கள் புதிய தலைவரான அமீர்ந்ர ரொட்ரிகோவிடம் இந்நிகழ்வின் போது ஒப்படைக்கப்பட்டன.
இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகள் பொருளாதார ஸ்திரமின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இலங்கையில் பொருளாதார ஸ்திர தன்மையை ஏற்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். 2015ம் ஆண்டு எமது ஆரம்ப நிலுவை வீழ்ச்சி போக்கில் காணப்பட்டது. ஆனால் தற்போது அதில் முன்னேற்றம் ஏற்பட்;டுள்ளது. இது சிறந்த பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியாகும். 2018ம் ஆண்டு எமது நாட்டில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. காணப்பட்டது. தற்போது எமது நாட்டில் பொருளாதார ஸ்திர தன்மையை ஏற்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம். எதிர்வரும் ஐந்து ஆறு வருடங்களில் இதன் பலன்களை நாம் பெற்று கொள்ள வேண்டும். இதற்காக நீண்டகால முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எமது ஏற்றுமதிகளை அதிகரிக்க நாம் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.