பிள்ளைகளை சமயஸ்தலங்களுக்கு அனுப்புவதில் ஆர்வம் வேண்டும்-எதிர்க்கட்சி தலைவர்
Related Articles
நிறுவர்களை போதை பொருளின் பிடியில் இருந்து பாதுகாப்பதற்காக அவர்களை அதிகளவில் சமய ஸ்தலங்களுக்கு அனுப்ப வேண்டுமென எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறை பொல்ஹேன புரான மகா விஹாரையில் இடம்பெறற் வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே எதிர்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமது பிள்ளைகளை பெற்றோர்கள் அறநெறி பாடசாலைகள் மற்றும் சமய ஸ்தலங்களுக்கு அனுப்புவதில் ஆர்வம் காட்டவேண்டும். பெற்றோர்களுக்கு இடையில் சிறந்த புரிந்துணர்வும் உறவும் நிலவினாலும் சிறுவர்கள் ஒழுக்கசீலர்களாக வளர்வார்கள். பெற்றோர்களுக்கு இடையில் அமைதி, சிறுவர்கள் மீது அக்கறை, பாசம் போன்றன இருந்தால் அந்த சிறுவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாக மாட்டார்கள் அவர் மேலும் குறிப்பிட்டார்.