fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போதை பொருள் ஒழிப்பு தொடர்பில் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ள தயார்-ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2019 14:06

போதை பொருள் ஒழிப்பு தொடர்பில் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ள தயார்-ஜனாதிபதி

ஏப்ரல் மாதம் 3ம் திகதி போதை பொருள் ஒழிப்பு தொடர்பில் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ள தயார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று மாத்தறை கொக்காவெல மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாத்தறை கொக்காவெல மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு மாணவர்களினால் சிறப்பாக வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் பாடசாலையில் உள்ள புத்தர் சிலைக்கு மலர் தூவி வழிபாடுகளில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து பாடசாலைக்காக நிர்மாணிககப்படவுள்ள உத்தேச விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல்லை ஜனாதிபதி நாட்டி வைத்தார். இதன் பின்னர் ஜனாதிபதியினால் இப்பாடசாலையின் ஆரம்ப கற்கை நெறிக்கான வளநிலையம், தொழில்நுட்ப ஆயவுகூடம் என்பன அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2019 14:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க