fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மகனை மறைத்துவைத்து கணவரிடம் கப்பம் கோரிய தாய் வவுனியாவில் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 10, 2019 12:56

மகனை மறைத்துவைத்து கணவரிடம் கப்பம் கோரிய தாய் வவுனியாவில் கைது

தமது மகனை மறைத்துவைத்து தந்தையிடம் 35 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரிய தாயொருவர் வவுனியா பெரியமடு பகுதியில் கைதுசெய்யபப்பட்டுள்ளார். 8 வயதான தமது பிள்ளையை உறவினர் வீடொன்றில் மறைத்துவைத்துவிட்டு வெளிநாட்டில் பணிபுரியும் தனது கணவனிடம் கப்பம் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதியப்பட்டுள்ளது. இதனையடுத்து கப்பம் கேட்பதற்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை நடத்தியதனூடாக பிள்ளையின் தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேசத்திலுள்ள பல்வேறு வங்கிகளிடம் பெறப்பட்ட கடனை மீள செலுத்துவதற்காகவே தனது பிள்ளையை மறைத்துவைத்து கணவரிடம் கப்பம் கோரியதாக குறித்த தாய் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 10, 2019 12:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க