லங்கைக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை பெப்ரவரி மாதத்தில் ஏழு சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இரண்டு இலட்சத்து 52 ஆயிரத்து 33 உல்லாசப் பிரயாணிகள் பெப்ரவரியில் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இந்தியாவில் இருந்தே அதிகளவான உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்னர். ஐக்கிய இராச்சியம், சீனா ஆகிய நாடுகளிலிருந்து அதற்கு அடுத்த படியாக அதிகளவான உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.