fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சர்வதேச மகளிர் தினம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2019 13:29

சர்வதேச மகளிர் தினம்

பெ‌ண்களு‌க்கான உ‌ரிமைகளை வென்றெடுத்த நாள் தான் மகளிர் தினம் பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண் வயிற்றில் பிறந்து, பெண்ணால் வளர்க்கப்பட்டு, பெண்ணோடு வாழ்பவர்கள்தான் எனினும், பெண்ணின் துயரங்களையும், விருப்பங்களையும், உணர்வுகளையும் ஆண்கள் தெரிந்து கொள்வதில்லை. தெரிந்து கொள்ள இந்த ஆணாதிக்க சமூகம் விரும்புவதுமில்லை. இந்த நிலையை மாற்றி பெண்ணுரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மார்ச் -8, 1857இல் நியூயார்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி போராட்டங்களை முன்னெடுத்தன.

இ‌ந்த உலக மகளிர் தினம் கொ‌ண்டாடுவத‌ற்கு காரணமான போரா‌ட்டமு‌ம், அத‌‌ன் வெ‌ற்‌றிகளு‌ம் அ‌வ்வளவு எ‌ளிதாக‌க் ‌கிட்டியத‌ல்ல‌ என்று தான் நாம் சொல்லவேண்டும். உலக மகளிர் தினம் உருவான பின்னணியை சற்று பார்த்தால் இப்போதுதான் அவர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

கி.பி. 1909-ல் அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியினர் முதல் முதலாக மகளிர் தினத்தை பிப்ரவரி மாதம் 28ம் தேதி கொண்டாடினர். இதன் முடிவாக 1911, மார்ச் 19 அன்று ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றம் சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அரசு அலுவலகங்கள் முன் திரண்டு வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் சமஉரிமை அளிக்கவேண்டும் எனப் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட கிளர்ச்சியினால் ஐக்கிய ராஜ்யம், ரஷ்யா போன்ற நாடுகளில் வேறுபட்ட நாட்களில் 1917 வரை இவ்வாறான குரல்கள் ஒலித்து வந்தன. 1917-க்குப்பின் உலக மகளிர் அமைப்புகள் ஒன்று கூடி மகளிர் தினத்தை மார்ச்-8 என்று கட்டமைத்தனர். இத்தகைய பெண்கள் போராட்டங்களால் 1945-ல் சான் பிரான்ஸிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் ஒன்றுகூடி பெண்கள் சமஉரிமை (gender equality as a fundamental human rights) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இதேவேளை இம்முறை மகளிர் தின தேசிய நிகழ்வுகள் அனுராதபுரம் சல்காது மைதானத்தில் இடம்பெறுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது. திறமையான பெண்கள் – சிறந்த உலகம் எனும் தொனிப்பொருளில் இம்முறை மகளிர் தின கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன. சுமார் 6 ஆயிரம் பெண்களின் பங்களிப்புடன் நிகழ்வு இடம்பெறுகிறது. இதேவேளை மகளிர் தின கொண்டாட்டங்களுக்கு இணைவாக பெண்களின் உற்பத்தி கண்காட்சியொன்றும் இடம்பெறுகின்றது. கைவினை உற்பத்திகள் அடங்கிய ஆயிரத்து 500 விற்பனை கூடங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இராணுவ மகளிர் படையணி உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் விற்பனை கூடங்களை அமைத்துள்ளனர். இதேவேளை சர்வதேச மகளிர் தினத்திற்கு இணைவாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2019 13:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க