fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வரவு செலவு திட்ட விவாதம் இன்றும் பாராளுமன்றத்தில்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2019 13:17

வரவு செலவு திட்ட விவாதம் இன்றும் பாராளுமன்றத்தில்

வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் 3ம் நாள் இன்றாகும். எதிர்வரும் 12ம் திகதி வரை விவாதம் இடம்பெறும். மனித உரிமைப் பேரவைக்கு மத்தியில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சர்வதேச நீதிபதிகளை இலங்கைகு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதில்லையென்றும். இராணுவத்தினரையோ அல்லது வேறு எவரையுமே சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்போவதில்லையென்றும் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் ஸ்த்தாபனத்தின் மனித உரிமை பேரவையினால் எமது நாடு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் குறித்து சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கருத்து தெரிவிக்கையில் கண்டி நகரில் முன்னெடுக்கப்பட்ட புதிய போக்குவரத்து திட்டமானது தோல்வியடைந்துள்ளதாகவும் இதனால் வாகன நெரிசல் ஏறபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். புதிய போக்குவரத்து திட்டமானது தோல்வியடைந்துள்ளமையால் அதனை நிறுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2019 13:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க