fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சர்வதேச மகளிர் தினம் : ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2019 13:09

சர்வதேச மகளிர் தினம் : ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து

பெண் உரிமைக்கு முதன்மை இடம் கொடுத்த நாடு இலங்கையென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆசிய நாடுகள் பலவும் வாக்கு உரிமையை பெற்று கொள்ள முன்னர் இலங்கை, பெண் உரிமைக்கு முதன்மை இடம் கொடுத்ததாகவும் உலக அரசியலில் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கிய நாடு என்பதுடன், பெண்ணால் சி;கரத்தையே எட்ட முடியும் என்பதை நாம் உலகிற்கு நிரூபித்து காட்டியுள்ளோம். பெண் என்பவள் அஹிம்சையின் மறு உருவம் என மகாத்மா காந்தி கூறியிருக்கின்றார். இருப்பினும் சமூகத்தினால் பெண்ணுக்கு உரித்தாக்கப்பட்டிருக்கும் பாரம்பரிய விதிமுறைகளுக்கு அப்பால் சென்று பெண்ணால் சிகரத்தை அடைய முடியும் என நவீன பெண்ணானவள் தனது செயற்பாடுகள் மூலம் நிரூபித்திருக்கின்றாள். உலக அரசியலில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு என்ற பெருமையை பெற்றிருக்கும் இலங்கை நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதல் பெண் ஜனாதிபதியையும் உருவாக்கிய பெருமயை பெற்றுள்ளது. இவை எமது நாட்டுக்கு எதேர்ச்சையாக கிடைத்த பெருமையல்ல. ஒரு ஆணுக்கோ அல்லது ஆண் பிள்ளைக்கோ இருக்கும் உரிமைக்கு சமமான உரிமையே பெண்ணுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் இருக்கின்றது என்பதை ஒரு நாடு என்ற வகையில் ஏற்று அந்த உரிமைகளை அனுபவிப்பதற்கான வேலைத்திட்டங்களை செயற்படுத்தியதன் விளைவே இவையாகும். அரச துறையில் உச்சியை அடைந்தது மாத்திரமன்றி அரசியல் தீர்மானங்களை இயற்றும் இடங்களிலும் முதலிடம் வகிப்பதற்கும் அத்தீர்மானங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இலங்கை பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். அத்தகையதோர் உயரிய நிலைமைக்கு இலங்கை பெண்களை கொண்டு செல்லும் இலக்கை அடைய திடசங்கற்பம் பூனுவோம் என சர்வதேச மகளிர் தின வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள சர்வதேச வாழ்த்துச் செய்தியில் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்களின் அர்ப்பணிப்பு மகத்தானது என தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் நாடு எதிர்கொண்ட பல்வேறுப்பட்ட பிரச்சினைகளின் போது பெண்கள் அச்சம் இன்றி துணிச்சலுடன் செயற்பட்டதன் மூலம் நாட்டை பலமடையச்செய்யததாகவும் அது மிகப் பெரிய அர்ப்பணிப்பாகும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். தற்போது புதிய உலகில் தொழில்நுட்பம் தொடர்பாடல் கல்வி விஞ்ஞானம் போன்ற பல்வேறு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பானது குறிப்பிடத்தக்கவை ஆகும். அதேபோன்று உலகில் நிலைப்பேறான வாழ்க்கை இருப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பல சவால்களுக்கு மத்தியில் பெண்கள் அளவு இல்லாத அர்ப்பணிப்புக்களையும் தியாகங்களையும் செய்து முன்னேற்றத்தினை நோக்கி பயணித்துள்ளனர். பெண்ணானவள் இதுவரை பெற்று கொண்ட வெற்றிகள் அனைத்தும் ஒட்டுமொத்த சமூகமும் பெற்று கொண்ட வெற்றியாகும். ஏன் எனில் பெண்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் மிகவும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றாள். சுறுப்பானதொரு பெண் அழகியதொரு உலகு எனும் தொனிப்பொருளுடன இம்முறை சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் நாள் சமூகத்திற்கு பெண்கள் வழங்கி வரும் வினைத்திறன் மிக்க பங்களிப்பை பாராட்டி ஊக்குவித்து அவர்களின் முன்னோக்கிய பயணத்திற்கு உந்து சக்தியாகவும் உதவியாகவும் இருக்க உறுதி பூணுவோம் என பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றும்  சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்ராணி பண்டார விடுத்துள்ள மகளிர் தின செய்தியில் ஆளுகையில் உயர்பங்கு வகிப்பதன் மூலம் அரசு பெண்களை அதிகாரம் உள்ளவர்களாக ஆக்குவதன் மூலமும் அவர்களுக்கு சம அந்தஸ்த்துக்களை வழங்கி சமூக மற்றும் பொருளாதார ரீதியான அபிவிருத்தியில் அதி உயர் மட்டத்தை அடைந்து வீறு நடை போடுகின்றாள். பெணானாவள் சமூகத்திற்கு மாத்திரம் இன்றி முழு உலகிற்கும் முன் உதாரணமாக திகழ்கின்றாள். உலகில் முன்னேற்றமடைந்த நாடுகள் பலவற்றை எடுத்துக்கொண்டால் பெண்களின் பங்களிப்பானது மிக முக்கிய இடத்தை வகிப்பதை உலக வரலாற்றை நோக்கினால் நிரூபனமாகின்றது. அறிவு திறன்கள் மற்றும் வினைத்திறன் கொண்ட பெண்கள் சமூகமானது நாட்டுக்கு பெருமதிமிக்க சொத்தாக விளங்குகின்றதாகவும் அவரது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2019 13:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க