அமெரிக்கா பாகிஸ்தானியர்களுக்கு புதிய விசா கட்டுப்பாட்டை அமுல்படுத்தியுள்ளது. புல்வமா தாக்குதலின் எதிரொலியாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய இதுவரை அமுலிலிருந்த 5 ஆண்டு கால விசா முறையை தற்போது 3 ஆண்டுகளாக குறைத்துள்ளது. குறித்த கட்டுப்பாடு பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கும் அமுலில் இருக்குமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையில் விசா பெறுவதற்கான விசா கட்டணத்தையும் 160 யிலிருந்து 192 டொலர்களாக அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பாகிஸ்தானியர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடு
படிக்க 0 நிமிடங்கள்