fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தோட்ட குடியிருப்பில் தீ

ITN News Editor
By ITN News Editor மார்ச் 6, 2019 12:34

தோட்ட குடியிருப்பில் தீ

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா கீழ்ப்பிரிவு தோட்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தினால் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளது. மற்றைய வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. நேற்று இரவு 11.45 மணியளவில் குறித்த தீச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 24 வீடுகளை கொண்ட லயன் குடியிருப்பிலேயே தீ பரவியுள்ளது. சம்பவத்தினால் வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், ஆடைகள் உட்பட பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக ஹட்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தோட்ட நிர்வாகம் தேவையான உதவிகளை செய்துவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 6, 2019 12:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க