மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான முழுமையான ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித எச்சங்கள் எந்த காலப்பகுனுதிக்கு உரியவை என்பதை கண்டுபிடிக்க காபன் பரிசோதனைக்காக கடந்த பெப்ரவரி 16 ம் திகதி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்ட 6 மனித எச்ச மாதிரிகள் குறித்தான ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மனித புதை குழி அகழ்வுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மன்னார் சதோஷ வளாகத்திலுள்ள குறித்த மனித புதைகுழியிலிருந்து இதுவரை 329 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மனித புதைகுழி எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்பிப்பு
படிக்க 0 நிமிடங்கள்