17 கிலோ 850 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெலிகம மற்றும் மிகிந்தலை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. வெலிகம மிதிகம பகுதியில் 12 கிலோகிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவரும், மிகிந்தலை பெரலுஹின்ன பகுதியில் 5 கிலோ 850 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மிதிகம, ராகமை, அனுராதபுரம் மற்றும் கெலன்பிந்துனுவௌ பகுதிகளை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
![](https://www.itnnews.lk/wp-content/uploads/2019/01/kerala-ganja.png)
கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது
படிக்க 0 நிமிடங்கள்