அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக தேர்தல் களத்தில் இறங்கப்போவதில்லையென ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். 2020 ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே 2016 ம் ஆண்டு தேர்தலில் டொனால்ட் டர்ம்புக்கு போட்டியாக குடியரசு கட்சி சார்பில் ஹிலரி கிளிண்டன் களமிறங்கினார் எனினும் அவர் தேர்தலில் தோல்வியடைந்தார். இந்நிலையில் 2020 தேர்தல் களத்தில் ட்ரம்ப்புக்கு எதிராக செயற்படப்போவதில்லையென ஹிலரி கிளிண்டன் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.