fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

500 கோடி ரூபா பெறுமதியான வைரக்கல்லுடன் கைதுசெய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2019 16:44

500 கோடி ரூபா பெறுமதியான வைரக்கல்லுடன் கைதுசெய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை

500 கோடி ரூபா பெறுமதியான வைரக்கல்லுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில் பண்ணிப்பிட்டிய எருச்சவல பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிந்து சந்தேக நபர்கள் சிலர் குறித்த வைரக்கல்லை கொள்ளையடித்தனர். பின்னர் இது குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். அதற்கமைவாகவே பாணந்துரை கெசல்வத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து பேலியகொட குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த வைரக்கல் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் பிடிகல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரொருவர் வழங்கிய தகவலுக்கமைய பாணந்துரை கெசல்வத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து குறித்த வைரக்கல் மீட்கப்பட்டது. மேலும் சந்தேக நபரின் வீட்டை பரிசோதனை செய்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்து ஒன்றரை கோடி ரூபா பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2019 16:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo