fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டில் புதிய 100 மாதிரிக் கிராமங்களை அமைக்கும் நடவடிக்கை ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 4, 2019 05:40

நாட்டில் புதிய 100 மாதிரிக் கிராமங்களை அமைக்கும் நடவடிக்கை ஆரம்பம்

நாட்டில் புதிய 100 மாதிரிக் கிராமங்களை அமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாத்திரம் 30 கிராமங்களை அமைக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்தார். அதற்கமைய நேற்றும் இன்றும் மாத்திரம் 130 கிராமங்களை அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இவ்வருடத்திற்குள் 2 ஆயிரத்து 500 மாதிரிக்கிராமங்களை அமைப்பதே நோக்கமாகும். இதுதொடர்பான நிகழ்வுகள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக சாகர பலன்சூரிய குறிப்பிட்டார். இன்றைய தினம் வடமாகாணத்தில் மாத்திரம் 40 மாதிரிக்கிராமங்களை அமைக்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் 25 புதிய கிராமங்கள் மன்னார் மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனோடு இணைந்ததாக புத்தளம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 28 வீடுகளை கொண்ட புதிய கிராமமும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 4, 2019 05:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க