மக்களினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்வாதி அமைச்சர் ஜோன் அமரதுங்க-ஜனாதிபதி
Related Articles
மக்கள் சேவைக்காக அர்ப்பணித்த மக்களினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்வாதி அமைச்சர் ஜோன் அமரதுங்கவை குறிப்பிடலாம் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் 40 வருட அரசியல் வாழ்க்கையின் நிறைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
ஐ.தே.க சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு அமைச்சர் ஜோன் அமரதுங்க பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அவர் சபாநாயகராகவும் எதிர்கட்சி தலைவராகவும் அமைச்சராகவும் பதவிகளை வகித்த சிரேஸ்ட அரசியல்வாதியாவார். அவரது நாற்பது வருடகால அரசியல் வாழ்க்கையை குறிக்கும் முகமாக கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வொன்று இடம்பெற்றது.
அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் 40 வருட அரசியல் வாழ்க்கை பற்றி நாம் பேசும் போது கடந்த 40 வருடங்களாக அவரால் எவ்வாறு பாராளுமன்றத்தில் தொடர்ந்து அங்கம் வகிக்க முடிந்தது என்பது தொடர்பில் விசேடமாக அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. அவர் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஒரு அரசியல்வாதியாக மக்களினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம். அவர் எந்தவொரு பிரச்சினையையும் யதார்த்தமாகவும் இன்முகத்துடனும் எதிர்கொண்டு வந்தார் என்பதை நான் பல வருடங்களாக அறிந்து வைத்துள்ளேன். அரசியல் துறையில் அவர் பூரணத்துவம் பெற்றவர் என்பதே எனது கருத்தாகும். தனது கடமையை அவர் செவ்வனே செய்தார். எதிர்காலத்தில் அவ்வாறு அவர் சேவையாற்றுவார் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோரும் இவ்வைபவத்தில் உரையாற்றினர்.