விபத்தில் ஒருவர் பலி
Related Articles
கம்பளை பொரளுமங்கட பகுதியில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கம்பொளை நுவரெலிய வீதியில் பொரளுகொட பகுதியில் லொறி, முச்சக்கரவண்டி, கார் உள்ளிட்ட நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த 23 வயது உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியின் முன்னால் சென்ற கார் திடீரென எதிர் திசைக்கு திரும்பியமையினால் விபத்து இடம்பெற்றது. இதில் நான்கு வாகனங்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.
கரையோர ரயில் பாதையில் களுத்துறை பகுதியில் தண்டவாளம் விலகியமையினால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. காலியில் இருந்து வருகை தந்த இலக்கம் 350 ரயில் களுத்துறை தெற்கு பகுதியில் இதனால் தடம் புரண்டது. இதன் காரணமாக தண்டவாளததிற்கும் ரயில் பெட்டிகளுக்கும் சேதம் ஏற்பட்டது. இரண்டு ரயில்கள் சமாந்தரமாக பயணம் செய்த போதே இவ்வாறு தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது.இதன்போது ஒரு ரயிலில் கொழும்பு நோக்கி பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். ரயில்வே ஊழியர்கள் உடனடியாக திருத்த பணியில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மகிலடி தீவில் நபர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 40 வயதுடைய கந்தகுட்டி நவரத்தினராசா எனும் நபரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். நடுத்ததர வயதுடைய குறித்த நபர் கிணற்றில் குளிக்க சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பாமையினால் அவரது உறவினர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர். இதன்போது அவரது சடலம் கிணற்றில் கிடப்பதை அவதானித்த உறவினர்கள் பொலிசாருக்கு அறிவித்துள்ளனர். ஆயித்தியமலை பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.