ஹெரோயினுடன் நபர்கள் கைது
Related Articles
பத்து கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யபபட்டுள்ளார்.
குளியாபிடிய எட்டிபொல கம்புராபொல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்று கொணடிருந்த போது குறித்த சந்தேகபர் கைது செய்யப்பட்டார். இதன்போது இவரிடம் இருந்து ஒருகிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சந்தேகநபரின் வீட்டில இருந்து மேலும் 9 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. இவற்றின் சந்தைப் பெறுமதி 120 மில்லியன் ரூபாவாகும். குறித்த சந்தேகநபர் நாகொல்லாகொட அம்பகஸ்கெதர பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
இதேவேளை 75 கிராம் ஹெரோயினுடன் மூன்று சந்தேகநபர்களை கிராண்பாஸ் பாபாபுள்ளே வீதி மற்றும் மாளிகாவத்தை பெத்தாராம ஆகிய வீதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கரவண்டிகளில் சென்று கொணடிருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து பெண் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். இந்த சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கபபட்டுள்ளது.