இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்த மெக்ஸ்வெல்….
Related Articles
இந்தியா மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான 2 டி-20 தொடர் நேற்று நிறைவுக்கு வந்தது.2 போட்டிகளிலும் வெற்றீட்டி தொடரை இந்திய மண்ணில் வைத்து தன் வசமாக்கியது ஆஸி.நேற்று பெங்களூரில் ஆரம்பமான 2ஆவது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா களத்தடுப்பை முதலில் தேர்வு செய்தது.அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.அணித்தலைவர் விராட் கோஹ்லி அதிரடியாக ஆடி ஆட்டமிழக்கமல் 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.இந்திய 20 ஓவர்கள் நிறைவில் மிக சிறப்பாக துடுப்படுத்தாடியது.191 எனும் கொஞ்சம் சவாலான ஓட்ட எண்ணிக்கையை நோக்கி களமிறங்கிய ஆஸி அணி யின் ஆரம்ப 2 விக்கட்டுக்களும் 22 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.இருந்தாலும் மெக்ஸ்வெல் களமிறங்கிய பின் இந்திய பந்துவீச்சுக்களை போட்டி நிறைவுறும் வரை துவம்சம் செய்து அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றார்.
மெக்ஸ்வெல் ஆட்டமிழக்காது 9 சிக்சர்கள் 7 பெண்டரிகள் உள்ளடங்களாக 113 ஓட்டங்களை பெற்று ஆஸி அணியின் வெற்றிக்கு உதவினார்.19.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களை பெற்று ஆஸி தொடரை கைப்பற்றியது.விஜய் சங்கர் 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.கிளேன் மெக்ஸ்வெல் போட்டி நாயகனாகவும் தொடர்நாயகனகாவும் தெரிவு செய்யப்பட்டார்.
ஆஸி 2-0 எனும் அடிப்படையில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து அதிரடியாக தோற்கடித்தது அவுஸ்திரேலியா