fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அலுகோசு பதவிக்கு 45 பேர் விண்ணப்பங்கள் : சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2019 12:00

அலுகோசு பதவிக்கு 45 பேர்  விண்ணப்பங்கள் : சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு

அலுகோசு பதவிக்கு 45 பேர் விண்ணப்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விண்ணப்பங்களில் வெளிநாட்டு பிரஜையொரும் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு பதவிக்கான வெற்றிடம் நிரப்பப்படவுள்ளது. போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டுமென்ற ஜனாதிபதியின் தீர்மானத்தையடுத்து அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதேவேளை மரண தண்டனைக்கென 17 கைதிகளின் பெயர் விபரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டமா அதிபரின் பரிந்துரைக்கமைய குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2019 12:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க