fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வியட்நாம் சந்திப்பின் 2ம் நாள் பேச்சுவார்த்தை இன்று

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2019 11:47

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வியட்நாம் சந்திப்பின் 2ம் நாள் பேச்சுவார்த்தை இன்று

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வடகொரிய தலைவர்களுக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வியட்நாம் சந்திப்பின் இரண்டாம் நாள் பேச்சுவார்த்தைகள் இன்று இடம்பெறவுள்ளன. சந்திப்பிற்கென டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் ஆகிய இருவரும் வியட்நாம் தலைநகர் ஹெனோயில் தங்கியுள்ளனர். முதல் நாள் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை திருப்தியளித்ததாகவும் எனினும் சில முரண்பாடுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார். எவ்வாறெனினும் கொரிய தீபகற்பத்தில் அணுவாயுத ஒழிப்பு திட்டம் குறித்து இன்றைய தினம் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இதன்போது கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2019 11:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க