மனிதர்கள் தான் உலகத்தை ஆளுகிறார்களா? நாம் அவ்வாறு நினைக்கலாம். அது அப்படி இல்லை.. நாம் வெறுமனே மனிதர்களால் கட்டப்பட்ட கணகவர் நிர்மாணங்களுக்கு மத்தியில் தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றோம்.அனையும் தாண்டி விலங்குகள் என்ற உயிர் இந்த பூமயில் காணப்படுகின்றன. இயற்கை சமநிலைக்கு பெரும்பங்கை வகிப்பது விலங்குகள் தான். மனிதர்கள் எண்ணிக்கையை விட விலங்குகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ள ஓர் பகுதிக்கு நுழையும் போது தான், விலங்குகளின் முக்கியத்துவமும் அவற்றின் நடத்தைகளையும் எம்மால் உணர முடியும். குறித்த பகுதிகளில் இந்த விலங்குகள் ஒரு இராஜ்ஜியத்தையே அமைத்து வைத்திருக்கும். அது எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
அவ்வாறு காணப்படுகின்ற ஒன்று தான் கிறிஸ்மஸ் தீவு, செந்நிற நண்டுகளின் உறைவிடம் என அழைக்கப்படுகின்றது. இங்கு ஒவ்வொரு சதுர மீற்றருக்குள்ளும் பாறைகளின் பிளவுகளிலும் பல்லாயிரம் கணக்கான செந்நிற நண்டுகள் காணப்படுகின்றன. இவற்றை பார்க்க விரும்பினால் இந்த நாண்டுகளின் வருடாந்த இடப்பெயர்வுக்காக காத்திருக்க வேண்டும். இது ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களிலேயே இடம்பெறும்.