காலியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கப்பம் கோரிய நபர் ஒருவரை அந்த வர்த்தக நிலையத்தின் ஊழியர்கள் மடக்கி பிடித்தனர். காலி மகா வீதியில் உள்ள கைக்கடிகார விற்பனை நிலையம் ஒன்றுக்கு வருகை தந்த குறித்த சந்தேகநபர் கூரிய கத்தியொன்றை காட்டி ஊழியர்களின் கப்பம் கேட்டுள்ளார். கடை உரிமையாளர் கப்பம் தர மறுத்தமையை தொடர்ந்து அவர் கத்தியினால் ஊழியர்களை தாக்க முயற்சித்துள்ளார். இதன்போது கடையின் ஊழியர்கள் அவரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சந்தேகநபர் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது பொலிஸ் காவலில் உள்ளார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/MuOtzakOHrs”]