fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் பிரிவிற்கென 9 பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2019 10:44

ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் பிரிவிற்கென 9 பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் பிரிவிற்கென 9 பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு 4 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கவுள்ளது. இந்நிலையில் கடந்த 29 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 215 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பெரும்பாலான முறைப்பாடுகள் அரசியல்வாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை எதிர்வரும் மார்ச் 7 ம் திகதி வரை முறைப்பாடுகளை முன்வைக்க முடியுமென அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2019 10:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க