fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலக்கு வைத்து தாக்குதல் நடாத்திய இந்தியா

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 26, 2019 13:02

இலக்கு வைத்து தாக்குதல் நடாத்திய இந்தியா

பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பாகிஸ்தான் பிரதேசமொன்றின் மீது இந்தியா இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளது. ஜெய்ஸ் ஈ மொஹமட் அமைப்பு, லக்ஷார் இ தைபா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புக்களின் முகாம்களை இலக்கு வைத்தே இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆயிரம் கிலோ கிராம் நிறையுடைய குண்டுகள் ஜெட் விமானங்கள் மூலம் பயங்கரவாத முகாம்களை இலக்கு வைத்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய விமானப்டை அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தான் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் அஸீப் கபூர் தகவல் அளிக்கையில் பாகிஸ்தானின் விமான எல்லையை மீறி செயற்பட்ட இந்திய விமானங்களை தேடி பாகிஸ்தான் விமானப்படை நடவடிக்கைகளை ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் இந்திய விமான படையினர் தப்பியோடியதாக தெரிவித்துள்ளார். அண்மையில் ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 இராணுவத்தினர் கொல்லப்பட்டதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் இவ்வாறு தாக்குதல்கள் உக்கிரமடைந்துள்ளன. எவ்வாறாயினும் இன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து இந்தியா இதுவரை எவ்வித அறிக்கையொன்றையும் வெளியிடவில்லை.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 26, 2019 13:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க