fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரத்கமவைச் சேர்ந்த இரு வர்த்தகர்கள் காணமல்போன சம்பவம் -நீண்ட விசாரணைகள்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 26, 2019 12:55

ரத்கமவைச் சேர்ந்த இரு வர்த்தகர்கள் காணமல்போன சம்பவம் -நீண்ட விசாரணைகள்

காணமல்போன ரத்கம வர்த்தகர்கள் இருவருடையதென சந்தேகிக்கப்படுகின்ற எலும்புத்துண்டுகள் வலஸ்முல்ல ஹெவன்தெனிய வனப்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.

ரத்கமவைச் சேர்ந்த இரு வர்த்தகர்கள் காணமல்போன சம்பவம் குறித்து நீண்ட விசாரணைகள் இடம்பெறுகின்றன. இவ் வர்த்தகர்கள் படுகொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற ஒருசில இடங்கள சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதற்கமைய பலஸ்முல்ல, ஹெவன்தெனிய வனப்பகுதியி இவ்விரு வர்த்தகர்களினதும் இரு எலும்புத்துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அப்பகுதியை அண்டி தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கையின் போது மேலும் ஒரு சில எலும்புத் துண்டுகள இன்றைய தினம் கண்டெடுக்கப்பட்டன. ஹெவன்தெனிய வனப்பகுதியில் இதற்கு முன்னர் எலும்புத்துண்டுகள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு சுமார் 4 மீற்றர் தூரத்திலுள்ள பகுதியிலேயே எலும்புத் துண்டுகள் இன்று கண்டெடுக்கப்பட்டன. தங்காலை மெஜிஸ்ரேட் சுரங்க முனசிங்க முன்னிலையில் எலும்புத் துண்டுகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இவ் எலும்புகள் அரச பகுப்பாய்விற்கென அனுப்பப்படவுள்ளதாக தங்காலை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 26, 2019 12:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க