fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அலுகோசு பதவிக்கு வெளிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 25, 2019 11:58

அலுகோசு பதவிக்கு வெளிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம்

அலுகோசு பதவிக்கு வெளிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அலுகோசு பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள போதிலும் கிடைத்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து வெளிநாட்டவர் ஒருவரை அலுகோசு பதவிக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். இதேவேளை அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி இன்றுடன் நிறைவடையவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். இந்நிலையில் போதைப்பொருள் தொடர்பில் மரண தண்டனை பெற்றுள்ள கைதிகளின் பெயர்ப்பட்டியல் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 1976 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 25, 2019 11:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க