இந்தியா மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான டி-20 மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகள் நேற்று ஆரம்பமாகின.நேற்று 2 போட்டிகளை கொண்ட டி-20 தொடரின் முதலாவது போட்டி விசாகப்பட்டிணத்தில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இதில் கே.எல்.ராகுல் அரைச்சதம் பெற்றார்.கோல்ட்டர் நைல் 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
127 எனும் ஓட்ட எண்ணிக்கையை நோக்கி களம் நுழைந்த ஆஸி அணி ஆரம்பம் முதல் இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சுக்கு முகம் கொடுப்பதில் சற்று சிரமத்தை எதிர்கொண்டது.ஆரம்ப விக்கட்டுக்கள் குறைந்த ஓட்ட எண்ணிக்கையில் வீழ்த்தப்பட்டாலும் 3ஆவது விக்கட் இணைப்பாட்டம் மிக நிதானமாக அமைந்ததனால் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதற்கும் ஏதுவாக இருந்தது.
20 ஓவரின் இறுதி 2 பந்துகளுக்கும் 6 ஓட்டங்களை தேவை என்றிருந்த நிலையில் 5ஆவது பந்தில் கமின்ஸ் ஒரு பெண்டரியை விலாச இறுதிப்பந்தில் 2 ஓட்டங்களை பெற்று ஆஸி அணி வெற்றியை வசப்படுத்தியது.கிளேன் மெக்ஸ்வெல் 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.ஜஸ்டின் பும்ரா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.இதனடிப்படையில் ஆஸி அணி 3 விக்கட்டுக்களினால் வெற்றி ஈட்டியது.போட்டி நாயகனாக கோல்ட்டர் நைல் தெரிவானார்.
இத்தொடரில் அவுஸ்திரேலியா 1-0 எனும் அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.