fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடல் எல்லையை மீறும் வெளிநாட்டு மீனவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 24, 2019 19:08

கடல் எல்லையை மீறும் வெளிநாட்டு மீனவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை

கடல் எல்லையை மீறும் வெளிநாட்டு மீனவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான இரண்டு சட்டமூலங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதத்தில் மாத்திரம் 15 இந்திய மீனவர்கள் 7 படகுகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய சட்டங்களின் படி குறித்த படகுகள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களை இந்திய உயர்ஸ்த்தானிகர் காரியாலயத்துடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து மீண்டும் இந்தியாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்தினால் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்திய மீனவர்கள் வருகை குறைவடைந்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 24, 2019 19:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo