fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை அணி வரலாற்று வெற்றி (PHOTOS)

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2019 17:21

இலங்கை அணி வரலாற்று வெற்றி (PHOTOS)

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி 08 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தொடரை இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணயசுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்கா அணி 61.2 ஓவரில் 222 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனையடுத்து போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 154 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. இரண்டாவது இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி 128 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 02 விக்கட் இழப்பில் 197 ஓட்டங்களைப் பெற்று 08 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதலாவது ஆசிய அணியென்ற சாதனையை இலங்கை பதிவு செய்தது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2019 17:21

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க