fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சேனா படைப்புளுவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இரு வாரங்களுக்குள் நட்டஈடு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2019 15:49

சேனா படைப்புளுவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இரு வாரங்களுக்குள் நட்டஈடு

சேனா படைப்புளுவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இரு வாரங்களுக்குள் நட்டஈடு வழங்கப்படுமென அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். பாதிப்புக்களை மதிப்பிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் கூடுதலான பாதிப்புக்களை சந்தித்த மாவட்டமும் இனங்காணப்பட்டுள்ளது. உரிய முறையின் கீழ் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.ஹெரிசன் குறிப்பிட்டார். எதிர்வரும் 10ம் திகதி நட்டஈடு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும். அம்பாறை மாவட்டமே கூடுதலான பாதிப்பை சந்தித்துள்ளது. மொனராகலை மாவட்டமும் சேனா படைப்புளுவால் குறிப்பிடத்தக்களவு பாதிப்பை சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நட்டஈடு வழங்கப்படும். ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபா வீதம் நட்டஈடு வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2019 15:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo