fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உபாதை காரணமாக லசித் எம்புல்தெனிய போட்டியில் இருந்து விலகல்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 22, 2019 16:48

உபாதை காரணமாக லசித் எம்புல்தெனிய போட்டியில் இருந்து விலகல்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்று கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நிறைவின் போது 3 விக்கட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றிருந்தது. போர்ட் எலிசபத்தில் நடைபெற்று வரும் இப்போட்டி தொடரின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. தென்னாபிரிக்க அணியின் முதல் 3 விக்கட்டுக்களையும் 15 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களினால் வீழ்த்த முடிந்தது. தென்னாபிரிக்க அணியின் குயின்டன் டீகொக் 86 ஓட்டங்களை அணிக்காக அதிகபட்சமாக பெற்று கொடுத்தார். பந்துவீச்சில் விஷ்வ பெர்ணான்டோ 62 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார். கசுன் ராஜித 3 விக்கட்டுக்களையும் தனஞ்சய டி சில்வா 2 விக்கட்டுக்களையும் திமுத் கருணாரட்ன ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர். தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்று கொண்டது. இதேவேளை இடது பெருவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இலங்கை அணி வீரர் லசித் எம்புல்தெனிய இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 22, 2019 16:48

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க