fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தானுக்கான நீர் விநியோகத்தை நிறுத்தியது இந்தியா

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 22, 2019 16:26

பாகிஸ்தானுக்கான நீர் விநியோகத்தை நிறுத்தியது இந்தியா

இந்தியா பாகிஸ்தானுக்கு நீரை விநியோகிக்கும் செயற்பாட்டை நிறுத்தியுள்ளது. கடந்த 14ம் திகதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலையடுத்தே இந்திய அரசாங்கம் இத்தீர்மானத்திற்கு வந்துள்ளது. மூன்று திட்டங்களின் கீழ் இந்தியாவில் உள்ள மூன்று கங்கைகளினால் பாகிஸ்தானுக்கு நீர் விநியோகிக்கப்படுகின்றது. கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்நீரினை இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலயங்களுக்கு விநியோகிப்பதற்கே திட்டமிடப்பட்டுள்ளது. இரத்தத்தையும் நீரையும் ஒரே தடவையில் பாய்ச்ச முடியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதேவேளை இந்தியாவினால் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு ஆக்கிரமிப்புக்களின் போதும் தாம் சிறந்த பதிலடியை வழங்க தயார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதற்கென பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு முழுமையான அதிகாரம் வழங்கபபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 22, 2019 16:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க