fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிண்ணியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15000 கியூப் மணல் மீட்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 22, 2019 16:19

கிண்ணியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15000 கியூப் மணல் மீட்பு

கிண்ணியா பகுதியில் பாதுகாப்பான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் கியூப் மணல் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட ஒருசில நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மோசடி வர்த்தகம் குறித்து கண்டறியப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த  கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன் கமாண்டர்  இசுறு சூரிய பண்டார :

“விசேடமாக திருகோணமலை மாவட்டத்தில் மகாவலி கங்கைக்கு அண்மித்த பகுதிகளில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மோசடி வர்த்தகத்தை தடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியும் இலங்கை கடற்படையினர் பூகோள அகழ்வு பணியகம் மற்றும் பொலிசார் இணைந்து பல சந்தர்ப்பங்களில் இச்சட்டவிரோத மோசடிகாரர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுத்தனர். இம்மாதம் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இப்பிரதேசத்தில் உள்ள சகல மணல் அகழ்வு அனுமதி பத்திரங்களையும் இரத்து செய்துள்ளதாக புவி சரிதவியல் ஆய்வு மற்றும் அகழ்வு பணியகம் அறிவித்தல் விடுத்துள்ளது. கடந்த 20ம் திகதி இலங்கை பொலிஸ் கடற்படை மற்றும் புவிசரிதவியல் அகழ்வு பணியகத்தின் அதிகாரிகள் திருகோணமலையின் பெரிய கிண்ணியா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக அகழப்பட்ட மணல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த களஞ்சியசாலையொன்றே சுற்றிவளைக்கப்பட்டது. இங்கு சுமார் 15 ஆயிரம் கியூப் மணல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது. இவற்றை அரசுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ” என தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 22, 2019 16:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo