பிரதமர் தலைமையில் புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் பல அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்
Related Articles
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் பல அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. உன்வௌ பாடசாலையின் கல்வி வள மத்திய நிலையம், ஆனமடுவ அரசாங்க மருந்தகம் மற்றும் வாரந்த சந்தை போன்றவற்றையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தும் நிகழ்விலும் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.