இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடரின் 2ஆவதும் இறுதியுமான போட்டி இன்று போர்ட் எலிசபத்தில் ஆரம்பமாகியது.நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வருகிறது.சற்று முன்னர் வரை 4 விக்கட்டுக்களை இழந்து 73 ஓட்டங்களை பெற்றுள்ளது.
மார்க்ரம் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களை பெற்றுள்ளார்.விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
உபாதை காரணமாக 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? என எதிர்பார்க்கப்பட்ட குசால் மெண்டிஸ் போட்டியில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.