விமானமொன்றை ஓட்டி உலகை திரும்பி பார்க்க வைத்த ஒரு கிரிக்கட் வீரராக உஸ்மான் கவாஜா காணப்படுகின்றார்.அவுஸ்திரேலிய அணியின் கிரிக்கட் வீரராக திகழும் உஸ்மான் கவாஜா ஒரு தகுதி பெற்ற விமானி. உலகின் மிகப்பெரிய விமானத்தை அவர் ஓட்டிக்கொண்டிருக்கிறார்.ஏர்பஸ் ஏ380 விமானத்தை கவாஜா ஓட்டி அசாலட்டாக தன்னை பற்றி உலகுக்கு எடுத்தி காட்டியுள்ளார்.
கவாஜா இந்திய அணிக்கெதிரான தொடரொன்றில் திறமையை வெளிப்படுத்த தவறியதன் பின்னர் அணியில் இடம்பிடிக்க முடியவில்லை.இருந்தும் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டி-20 தொடரில் கவாஜா இடம்பிடித்துள்ளார்.
கவாஜா விமானம் ஓட்டியது பற்றி குறிப்பிடுகையில் ”தனது தந்தை 6 வருடங்களாக சவூதி அரேபியாவில் பணி புரிந்துள்ளார்.நான் சிறு வயதில் அங்கு சென்றிருக்கிறேன்.நான் விமானியாக ஆசைப்பட்டேன்.நியூ சவுத்வேல்ஸ் ஸ்கூல் ஒப் எவியேஷனில் பட்டம் பெற்றுள்ளேன்” என தெரிவித்தார்.