fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காலஞ்சென்ற தேரர் நரமானே ஸ்ரீ புத்த ரக்கித தேரரின் திருவுடலுக்கு பிரதமர் இறுதி அஞ்சலி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2019 12:51

காலஞ்சென்ற தேரர் நரமானே ஸ்ரீ புத்த ரக்கித தேரரின் திருவுடலுக்கு பிரதமர் இறுதி அஞ்சலி

பாணந்துரை குகுலசிறி பரம விஷூக்தாராமய விஹாரையில் வைக்கப்பட்டுள்ள காலஞ்சென்ற தேரர் நரமானே ஸ்ரீ புத்த ரக்கித தேரரின் திருவுடலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஸ்ரீ புத்த ரக்கித தேரர் தனது 95வது வயதில் காலமானார். இலங்கையின் பௌத்த மக்கள் மத்தியில் பெரும் மதிப்பை பெற்ற இவர் பௌத்த மத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நூல்களையும் தயாரித்துள்ளார். பௌத்த மதத்திற்கு இவர் ஆற்றிய சேவையை ஜனாதிபதி பாராட்டியிருந்ததுடன், இப்பிரதேச பௌத்த மதத்தின் கலாசார வளர்ச்சிக்கும் அவர் சேவையாற்றியிருந்தார். பாணந்துரை நகர சபை மைதானத்தில் இன்றைய தினம் இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2019 12:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க