fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை சட்டதரணிகள் சங்கத்திற்கான 25ஆவது தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2019 11:27

இலங்கை சட்டதரணிகள் சங்கத்திற்கான 25ஆவது தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கான 25ஆவது புதிய தலைவர் மற்றும் செயலாளரை தேர்ந்தெடுப்படுதற்கான தேர்தல்  தற்பொழுது இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் தற்பொழுது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.இன்று மாலை 5 மணி வரை இந்த தேர்தல் இடம்பெறும்.நாடு முழுக்கவுள்ள 84 மத்திய நிலையங்களிலேயே இந்த இதற்காகன வாக்குப்பதிவுகள் இடம்பெறுகின்றன.வாக்களிப்பதற்காக தமது சட்டத்தரணிகள் சங்கத்தின் அடையாள அட்டையினை வாக்களிப்பு நிலையங்களுக்கு உறுப்பினர்கள் எடுத்துச்செல்ல வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கான தலைவர் பதவிக்காக ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி மஹிந்த லொக்குகே ஆகியோர் போட்டியிடுகின்ற நிலையில் செயலாளர் பதவிக்காக தற்போதைய செயலாளர் கௌசல்ய நவரத்ன மற்றும் மற்றும் சட்டத்தரணி சமன் வெலிஅங்கே ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2019 11:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க