fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஏற்றுமதிக்கு பொருந்த கூடிய வகையில் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்-அமைச்சர் தயாகமகே

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2019 15:32

ஏற்றுமதிக்கு பொருந்த கூடிய வகையில் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்-அமைச்சர் தயாகமகே

ஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை அமைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார். இதற்காக உலக வங்கியின் நிதி உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க வேண்டுமானால் ஏற்றுமதிக்கு பொருந்த கூடிய வகையில் பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். தேசிய சநதைக்கு சர்வதேச நாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் பொருட்களை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்யலாம் அதன்போது எமது தேசிய வருமானம் அதிகரிக்கும். அதற்காக உழைக்கும் அனைத்து தொழில் முயற்சியாளர்களுக்கும் உதவுவதற்காக நான் அவர்களுக்கு உலக வங்கியிடமிருந்து எமது அமைச்சின் ஊடாக நிதியை பெற்றுக்கொண்டுள்ளேன். இந்த நிதியிலிருந்து தேசிய உற்பத்தியாளர்களுக்கு கடன் உதவி மட்டுமல்லாமல் நிவாரண உதவிகளையும் என்டர்பிரைஷ் ஸ்ரீலங்கா கடன்திட்டத்தின் ஊடாக வழங்கமுடியும். இதன் மூலமாக நாம் எதிர்பார்ப்பது என்னவென்றால் எமது பிரதேசங்களிலுள்ள உற்பத்திகளை அதிகரித்து கொள்வதாகும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்க முயற்சியாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் வைபவம் அமைச்சர் தயாகமமே தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. தெஹியத்தக்கண்டிய, பதியத்தளவா, மகாஓய மற்றும் அம்பாரை ஆகிய பிரதேசங்களிலுள்ள வாசனை திரவிய உற்பத்தியாளர்களுக்கு இங்கு நிதியுதவி வழங்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் பலர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2019 15:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க