fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மீன்பிடியின் போது பல்வேறு மோசடிகள்-அமைச்சர் பி.ஹெரிசன்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2019 12:59

மீன்பிடியின் போது பல்வேறு மோசடிகள்-அமைச்சர் பி.ஹெரிசன்

மீன்பிடி நடவடிக்கைகளின் போது பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாக அமைச்சர் பி.ஹெரிசன் குறிப்பிட்டுள்ளார். விசேடமாக கடல் மார்க்கமாகவே போதைப்பொருட்கள் நாட்டிற்கு எடுத்து வரப்படுவதாகவும் இதனால அதனை கட்டுப்படுத்த அனைத்து படகுகளுக்கு சிக்கனல் கட்டமைப்புக்களை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் கலாவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

மீன்பிடியின் போது பல்வேறு மோசடிகள் இடம்பெறுகின்றன. விசேடமாக நாட்டிற்குள் போதைப்பொருள் கொண்டுவரப்படுவது மற்றும் சட்டவிரோதமான முறையில் வேறு நாட்களுக்கு ஆட்கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாம் இதுதொடர்பாக மீன்பிடி திணைக்களமும் , கடற்டொழில் நீரியல் வள அமைச்சும் இணைந்து அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் சிக்னல் கட்டமைப்புக்களை வழங்கி வருகின்றோம். இன்னும் ஆயிரத்து 500 சிக்னல் கட்டமைப்புக்கள் இவ்வாறு வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் கடலில் எப்பகுதியில் மீன்பிடி படகுகள் இருந்தாலும் அது பதிவு செய்யப்பட்டுள்ள விதம் மற்றும் அதன் நடவடிக்கைகள் தொடர்பிலும், கடல்சார் சட்டவிதிகளுக்கு ஏற்ப செயற்படுகின்றதா என்பது பற்றியும் எமக்கு அறிந்து கொள்ளமுடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கலாவௌ மீன்வளர்ப்பு பயிற்சி மையத்தில் இடம்பெற்ற இக்கலைந்துரையாடலில் மீன்வளர்;ப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இதன்போது 24 மீனவர்களுக்கு பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் இங்கு வழங்கிவைக்கப்பட்டன. ராஜங்கணைய, அங்கவுவ, கட்டியாவ, ஹபரண, கலாவௌ, பதவிய, மஹகனதராவ மற்றும் மகாவிலச்சிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கே இவை பகிர்ந்தளிக்கப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2019 12:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க