புத்தசாசனத்தில் கூறப்பட்டுள்ள பல புனித நிகழ்வுகள் இடம்பெற்ற புனித நோன்மதி தினமாகும். இதனையொட்டி நாடெங்கிலுமுள்ள பௌத்த வழிப்பாட்டு தலங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்றன.
பௌத்த சாசனத்தின் படி பௌத்த மக்களுக்கு நவம் நோன்மதி தினம் மிகவும் புனிதமான ஒரு தினமாகும். இதுபோன்ற புனித தினமொன்றிலேயே புத்த பெருமான், பௌத்த பிக்குகள் இவ்வாறு இருக்க வேண்டுமென போதனை செய்துள்ளார். இன்றைய புனித நோன்மதி தினத்தையொட்டி நாடெங்கிலுமுள்ள விகாரைகளில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
சுயாதீன ஊடக வலையமைப்பினால் ஒளிபரப்படும் சவனக்ரெஸ் நிகழ்ச்சி பயாகல பொதுவில வெரலகலகந்த விகாரையிலிருந்து இம்முறை ஒளிபரப்பப்படுகின்றது. சங்கைக்குரிய மங்களகம மெத்தானந்த தேரரின் அனுசாசனத்தில் இந்நிகழ்வு இடம்பெறுகின்றது. சங்கைக்குரிய பிம்புரே சோமரத்தன தேரர் பிரதான தர்ம உரையை போதிக்கின்றார். நவம் நோண்மதி தினத்தை முன்னிட்டு இன்று மாலை இடம்பெறவுள்ள நிகழ்வுகள் ஐரீஎன் ஊடாக நேரடியாக ஒளிபரப்படவுள்ளன.
இதேவேளை ஐரீஎன் எப்எம் ஏற்பாட்டில் இடம்பெறும் சாசனலோக்க நிகழ்ச்சி இம்முறை இதே விகாரையில் இடம்பெறுகின்றது. இங்கு இளம் பிக்குமாருக்கு சமய நூல்கள் மற்றும் பூஜை வழிபாடுகளுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன. இளம் பிக்குகளை பௌத்த மதத்திற்காக அர்ப்பணித்த அவர்களது பெற்றோர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.
இநேரம் ஒவ்வொரு நோண்மதி தினத்தன்றும் ஏற்பாடு செய்யப்படும் சதஹம் யாத்ரா தர்ம சொற்பொழிவு இம்முறை பாணந்துரை பிங்வத்த சதர்மாகார பிரிவெனாவில் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் கலந்து கொண்டார். சங்கைக்குரிய மீரகஹாவத்த பஞ்ஞாசிரி தேரர் தர்ம போதனைகளை நிகழ்த்தினார்.