fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வீதி ஒழுங்கில் மாற்றம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2019 12:11

வீதி ஒழுங்கில் மாற்றம்

கிங்சி வீதி சுற்றுவட்டத்திலிருந்து கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரையிலான பகுதியில் ஒரு வழிப் போக்குவரத்திற்காக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நடைமுறை இன்று முதல் அமுலாகுவதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய வாரநாட்களில் ஹோட்டர்ன் பிரதேசம், கிங்சி வீதி சுற்றுவட்டத்தில் இருந்து கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரையிலான பகுதயில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு வழிப்போக்குவரத்துக்காக மட்டுப்படுத்தப்படவுள்ளது. ஆயுர்வேத சுற்றுவட்டத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய கிங்சி சுற்றுவட்டத்திலிருந்து கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரை பயணிக்கும் வாகனங்கள் மருதானை, பொரள்ள வீதிகளின் இரு மருங்கிலும் அல்லது கிங்சி பகுதியினூடாக வோர்ட் பிரதேசத்தின் இரு மருங்கிலும் பயணிக்க முடியுமென பொலிசார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய புதிய ஒழுங்குமுறையை கடைப்பிடிக்குமாறு சகல வாகன சாரதிகளுக்கு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2019 12:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க