இலங்கை அணிக்கு இலக்கு 304
Related Articles
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் டேர்பனில் ஆரம்பமாகியது.அதன் படி நாணய சுழலில் வென்ற இலங்கை, தென்னாபிரிக்க அணியை முதலில் துடுப்பெடுத்தாட வேண்டியது.அதன்படி தனது முதலாவது இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களை பெற்றது.குயின்டன் டி கொக் தனது பங்கிற்கு 80 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கட்டுக்களi வீழ்த்தினார்.அதன் பின் தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.குசல் ஜனித் பெரேரா 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.டேல் ஸ்டெய்ன் 4 விக்கட்டுக்களi வீழ்த்தினார்.பின்னர் தனது 2ஆவது இன்னிங்சில் ஆடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 259 ஓட்டங்களை பெற்றது.பாப் டு பிளஸிஸ் 90 ஓட்டங்களை பெற்றார்.304 எனும் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கட்டுக்களை இழந்து 83 ஓட்டங்களை பெற்றுள்ளது.இன்று போட்டியின் 4ஆவது நாளாகும்.