9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய சகல வசதிகளையும் கொண்ட விளையாட்டு மைதானங்களை நிர்மாணிக்க போவதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
அமைச்சர் இங்கு உரையாற்றுகையில் :
“பதக்கங்களை பெற்று கொள்ள கூடிய சிறந்த ஓடுதளங்களை அமைக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் சக விளையாட்டு வீரர்களுக்கும் காப்புறுதி திட்டம் ஒன்றை வழங்கும் வேலைத்திட்டங்கள் குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம். விளையாட்டு வீரர்களின் சுகாதார நிலைமைகள் குறித்து கண்காணிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் உள்ள செய்கை ஓடுதளங்களும் சேதமடைந்துள்ளன. இதனால் மாகாணங்களிலும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு மைதானங்களை நிர்மாணிப்பதற்கும் அங்கு நீச்சல் தடாகங்களை ஏற்படுத்தி பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் குறித்து கண்டறியப்பட்டுள்ளது. விளையாட்டு துறை அமைச்சினால் சகல மாகாணங்களிலும் விளையாட்டு மைதானங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஒரு மாகாணத்திற்கு குறைந்தபட்சம் ஒரு விளையாட்டு மைதானமேனும் உள்ளது.” என தெரிவித்தார்