எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாதனை படைக்கும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் மொயின் கான் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மொயின் கான்,
உலகக்கிண்ண போட்டிகளில் இந்திய அணியை எந்தவொரு போட்டியிலும் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது இல்லை.ஜூன் மாதம் இங்கிலாந்தில் காலநிலை வேகப்பந்து விச்சாளர்களுக்கு சாதகமானதாக இருக்கும்.எங்களது அணியில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.பாகிஸ்தான் அணி தலைவர் தலைவர் சர்பராஸ் சிறந்த தலைவராக உள்ளார்.அவரை விட பாகிஸ்தான் அணியை வழி நடாத்த சிறந்த தலைவரில்லை.எனவே இம்முறை இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாதனை படைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.