fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒரு காலத்தில் இந்தியாவில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2019 14:43

ஒரு காலத்தில் இந்தியாவில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது

தொழில்நுட்ப மற்றும் தொழிற்சார் தகைமை கொண்ட பிரஜைகளை உருவாக்குவதன் மூலம் உலகத்தை வெறறிக்கொள்ளலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குருநாகல் விஸ்வோதா பாடசாலையை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

100 கோடி ரூபா செலவில் விஸ்வோதா வித்தியாலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வகுப்பறை உள்ளிட்ட நவீன வசதிகளை கொண்டதாகவும், மூன்று மொழிகளிலும் கற்கை;களை மேற்கொள்ள கூடிய விதத்தில் இப்பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.

முன்னர் ஆடைக்கைத்தொழில் பொருளாதாரமே இலங்கையில் காணப்பட்டது. பங்களாதேஷ், மியன்மார், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகின்றது. ஒரு காலத்தில் இந்தியாவில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 20கும் மேற்பட்ட நாடுகளில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆகவே எமது சிறிய நாடான இலங்கை தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழில்சார் தகைமை கொண்ட தொழிற்படையின் மூலமே நாட்டை முன்னேற்றலாம். கல்வியின் மூலம் நாம் இதனையே மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட பலர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2019 14:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க